காஸா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகங்கள் (Laboratories) மற்றும் இரத்த வங்கிகளில் (Blood Banks) கடுமையான மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக முழுமையாக முடங்கும் நிலையை எட்டியுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக இரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு (World Blood Donor Day) காஸா சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், ஆய்வகங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பரிசோதனை மூலப்பொருட்களில் (Testing Materials) 87 வீதமானவை தற்சமயம் கையிருப்பில் இல்லை.
போதிய மருத்துவப் பரிசோதனை கருவிகள் மற்றும் ஆய்வக உபகரணங்கள் இல்லாததன் காரணமாக, நோயாளிகளுக்கான அத்தியாவசிய பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
காஸா முனையில் உள்ள இரத்த வங்கிகளில் தற்சமயம் கடுமையான இரத்தப் பற்றாக்குறை நிலவுவதாகவும், அவசரமாக மேலதிக இரத்தம் தேவைப்படுவதாகவும், சுகாதார அமைச்சு அவசர கோரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
