மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது 20 க்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 169 ஓட்டங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரை 2-1 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி கொண்டுள்ளது.
