Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

விலைச் சூத்திரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்

ஆனி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நெல்லுக்கான உத்தரவாத விலையை தீர்மானிப்பதற்கு பயன்படுத்தப்படும் விலைச் சூத்திரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றாடல், விவசாயம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விதை நெல், உரம், விவசாய இரசாயனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட முக்கிய உள்ளீட்டுச் செலவுகளை இந்த விலைச் சூத்திரம் கணக்கில் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இலங்கையின் வருடாந்த உரத் தேவை அரசாங்க மற்றும் தனியார் துறை கொள்வனவுகள் மூலம் எவ்வாறு பூர்த்தி செய்யப்படுகிறது என்பது குறித்த விபரங்களையும் அவர் கோரியுள்ளார்.

உலகளாவிய மோதல்கள் உர விலையில் ஏற்படுத்தும் தாக்கத்தை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்களுக்கு முன்னரும் பின்னருமான உர விலைகளை ஒப்பிட்டுப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், ஹோர்முஸ் நீரிணை ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உரங்களின் மீதான தாக்கம் குறித்து தெளிவுபடுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

‘கஜினி’ திரைப்பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களை வலுவூட்ட அரசாங்கம் நடவடிக்கை!

ஆடி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஆபாச செயலிகளை நீக்க உத்தரவு!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விற்பனை செய்த உரிமையாளர் கைது

புரட்டாதி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube