Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தினபுரி பாடசாலைகளுக்கு IT உபகரணங்கள் கையளிப்பு

ஆனி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இரத்தினபுரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுதும் நோக்கில், மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான கணணிகள், ஸ்மார்ட் போர்ட், மடிக்கணினிகள் மற்றும் அதற்குரிய தளபாடங்கள் நேற்றைய தினம் (15/06) மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

சப்ரகமுவ மாகாண கௌரவ ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தின, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ சாந்த பத்மகுமார அவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுபினர்கள் இணைந்து இவ்வுபகரணங்களை பாடசாலை அதிபர்களிடம் வழங்கி வைதனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், “21ம் நூற்றாண்டின் கல்வி என்பது தொழில்நுட்பத்துடன் இணைந்தது. தமிழ் மொழி மூல பாடசாலை மாணவர்களும் ஏனைய மாணவர்களுக்கு இணையாக டிஜிட்டல் கல்வியை பெற வேண்டும் என்பதே எமது நோக்கம். இந்த உபகரணங்கள் வெறும் கருவிகள் அல்ல, அவை மாணவர்களின் எதிர்கால கனவுகளுக்கான கதவுகள்” என தெரிவிதார்.

ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தின உரையாற்றுகையில், “சபரகமுவ மாகாணத்தில் கடந்த காலத்தில் புறக்கணிக்கபட்ட தமிழ் பாடசாலைகளுக்கு இன்று முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த ஆரம்பம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்” என அவர் உறுதியளித்தார்.

வழங்கப்பட்ட உபகரணங்கள் மூலம் பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, மாணவர்கள் கணினி அறிவு, இணைய வளங்களை பயன்படுத்தி கற்கும் வாய்ப்பு பெறுவர். ஆசிரியர்களுக்கும் டிஜிட்டல் கற்ப்பிதல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

தீக தந்து யானை மரணம்: பொதுச்சொத்துச் சட்டத்தில் நடவடிக்கை

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது – ஜனாதிபதி அனுர!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாரஹேன்பிட்டி பகுதியில் வீடொன்றில் தீ விபத்து!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube