Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

வருடத்திற்கு ஒருமுறை மின்சார கட்டணத்தை திருத்தம் செய்யும் புதிய முறைமை தொடர்பில் ஆலோசனை!

சித்திரை 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மின்சாரக் கட்டண முறையைத் தயாரிப்பதற்கும், அதற்கு அனுமதி வழங்குவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு மாத்திரமே அதிகாரம் உள்ளதாக, அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சு என்பது மின்சாரத் துறையின் உரிமையாளர் மாத்திரமே என்பதால், தமக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் உரிமையாளருக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, தற்போது இலங்கையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் திருத்தப்படும் முறை நடைமுறையில் உள்ளது.

ஆனால், இதனை மாற்றி ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே கட்டணத் திருத்தம் செய்யும் புதிய முறையைக் கொண்டுவர நிதி அமைச்சும், எரிசக்தி அமைச்சும் ஆலோசித்து வருவதாக ஜெயநாத் ஹேரத் கூறியுள்ளார்.

எனினும், மின்சாரக் கட்டணத்தைச் சீரமைப்பதற்கான சூத்திரத்தை ஆணைக்குழுவே தயாரிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போதே, நியாயமான செலவு மற்றும் சரியான இலாபத்தை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஆண்டுக்கு எத்தனை முறை கட்டணத்தை மாற்றுவது என்பது போன்ற ‘கொள்கை முடிவுகளை’ எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கும், அரசாங்கத்துக்கும் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்காசிய AI வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான்

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விஜயை சந்தித்த TNPF குழு

ஆடி 3, 2026
இலங்கைவானிலை

பல மாவட்டங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவான சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube