Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏற்றுமதிக்கு பாதிப்பு? இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Sri Lanka Exports US Tariffs Preventive Measures Labour Standards Forced Labour Child Labour US Market Apparel Exports

ஆனி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்கா விதிக்கத் திட்டமிட்டுள்ள புதிய சுங்க வரிகளைத் தவிர்க்கும் நோக்கில், கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட இறக்குமதி பொருட்களை அடையாளம் காணும் சுங்கப் பரிசோதனைகளை மேலும் வலுப்படுத்தவும், சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை நடவடிக்கை எடுத்து வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே வலுவான தொழிலாளர் சட்டங்களும் நடைமுறைகளும் உள்ளதாகத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, சிறுவர் தொழில் மற்றும் கட்டாய உழைப்பு தொடர்பான எந்தவித சந்தேகங்களையும் முற்றிலுமாக நீக்குவதற்காக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறினார்.

மேலும், பணியிடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தலின்றி வேலை செய்யும் உரிமையை அங்கீகரிக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) C190 உடன்படிக்கையை இலங்கை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆடை ஏற்றுமதியில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கிறது. சுமார் 3 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஆடைத் துறை கடந்த ஆண்டு 5 பில்லியன் டொலர் ஏற்றுமதியைப் பதிவு செய்திருந்தாலும், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏற்றுமதி 7.4 சதவீதம் குறைந்து 1.53 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் புதிய வரி திட்டத்தின் கீழ், இலங்கை உள்ளிட்ட 60 பொருளாதாரங்கள் அதிகபட்சமாக 12.5 சதவீத சுங்க வரியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன. போட்டி நாடுகளான பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் 10 சதவீத வரி விகிதத்தில் உள்ள நிலையில், இலங்கைக்கு 12.5 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.

இதனிடையே, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தற்போதைக்கு வாஷிங்டனுக்கு விசேட பிரதிநிதிக் குழுவை அனுப்பும் திட்டம் இல்லை எனவும் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 3 பேர் பலி!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு! 80 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube