Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

OMP அலுவலகம் சர்வதேச வழிகாட்டல்களுடனேயே செயற்படுகிறது

#OMP #OfficeOfMissingPersons #SriLanka #HumanRights #InternationalStandards #Accountability #Justice #RuleOfLaw #GoodGovernance #Transparency #TruthAndJustice #Reconciliation #HumanRightsSriLanka #Governance #PublicService

ஆனி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அலுவலகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது காணாமல் போனோர் பற்றிய அலுவலகமானது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆகியவற்றின் வழிகாட்டல்களுக்கு அமையவே முற்றிலும் சட்டப்பூர்வமாக இயங்கி வருகிறது.

அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தினாலும், இது எந்தவொரு இராணுவப் பிரிவிற்கோ, போலீசாருக்கோ அல்லது அரசியல் தரப்பிற்கோ சாதகமாகச் செயல்படாத ஒரு சுயாதீனமான ஆணைக்குழு ஆகும்

பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையைக் கண்டறிந்து, தவறிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

தற்பொழுது மக்கள் மத்தியில் ஓ.எம்.பி-யின் செயல்பாடுகள் குறித்து நேர்மறையான (Positive) எண்ணம் உருவாகியுள்ளதால், மாவட்ட ரீதியாக நடத்தப்படும் அமர்வுகளுக்கு மக்கள் அதிகளவில் வருகை தந்து வருகின்றனர்.

தினசரி 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், 85-க்கும் அதிகமான குடும்பங்கள் நேரில் வந்து சாட்சியங்களையும் தகவல்களையும் வழங்கி வருகின்றன.

மக்களிடையே நிலவும் தவறான புரிதல்களை நீக்கி, உண்மையைச் சமூகத்திற்குக் கொண்டு சேர்க்கும் முக்கியப் பங்கு ஊடகவியலாளர்களுக்கு உண்டு என மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

கடற்பரப்புக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

CBL குழுமத்தின் தலைவர் ரம்ய சனத் அமரவீர விக்கிரமசிங்க காலமானார்!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து – ஒருவர் பலி!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

 பஸ் கட்டண திருத்தம் குறித்து தனியார் பேருந்து சங்கம் எச்சரிக்கை!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube