Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

அமோனியா வாயுக்கசிவால் 9 பேர் உயிரிழப்பு!

ஆனி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், அமோனியா வாயு கசிவினால் பாதிக்கப்பட்டு தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இன்று ஜூன் 21, தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் உற்பத்தி பிரிவில் எதிர்பாராத விதமாக அமோனியா வாயு கசிந்ததால், அங்கு பணியாற்றிய 64 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதோடு, 15 பேர் அரச மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 24 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை, 24 மணி நேரத்திற்குள்ளாகவும்,முழுமையான விசாரணை அறிக்கையை 3 நாட்களுக்குள்ளும் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு பொது சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளதோடு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரப்பட்டுள்ளார்.

அத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு மாநில ஈட்டுறுதி காப்பீட்டு திட்டம் / வேலையால் இழப்பீட்டு சட்டத்தின் கீழ் உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொத்தமலை கெரண்டிஎல்ல பஸ் விபத்து நடந்து ஒருவருடம் நிறைவு – உயிரிழந்த உறவுகளுக்காக விசேட மத வழிபாடுகள்!

வைகாசி 11, 2026
உலகம்

குவைத்தில் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரவு 8:00 மணிவரை நீர்வெட்டு!

ஆனி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வெனிசூலாவில் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1,430 ஆக உயர்வு!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube