Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பொது சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி பணம் பறிப்பு!

ஆனி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொது சுகாதார பரிசோதகர்கள் எனத் தங்களை பொய்யாக அடையாளப்படுத்திக் கொண்டு, பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நபர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நாட்டில் பரவி வரும் டெங்கு நோய் நிலையைப் பயன்படுத்தி, வீடுகளைப் பரிசோதனை செய்வதாகக் கூறி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட வீடுகளுக்குச் சென்று சில நபர்கள் ஏமாற்றிப் பணம் வசூலிப்பதாகப் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களது உத்தியோகபூர்வ கடமைகளின் போது எந்தவொரு சூழ்நிலையிலும் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதோ அல்லது கட்டணம் அறவிடுவதோ கிடையாது என பொது சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களை சுகாதார பரிசோதகர் என்று கூறிக்கொண்டு யாராவது பணம் கேட்டால், அவர்களிடம் பணத்தைக் கொடுக்க வேண்டாம் எனப் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், இது போன்ற சந்தேகத்திற்குரிய நபர்கள் அல்லது பணக் கோரிக்கைகள் குறித்து ஏதேனும் தெரியவந்தால், அதுகுறித்து உடனடியாக பொலிஸாருக்கு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணிக்கு செல்லும் நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22 தேரர்கள் 110 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் கைது!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி மீது மோதியதில் பாதசாரி உயிரிழப்பு!

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube