வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ரூ.20 இலட்சம் பணத்தை மோசடி செய்ததாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.
அதன்படி, நேற்று (26) காலை அலுபோமுல்ல பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய 41 வயதுடைய பாணந்துறை பகுதியைச் சேர்ந்த பெண் சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
