அனுராதபுர பன்முகப் போக்குவரத்து மையத்தின் ஒரு பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (28) திறந்து வைக்கப்பட்டது.

பொசன் விழாவையொட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நகரமான அனுராதபுரத்திற்கு வருகை தரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் மற்றும் நகர மக்களின் பெறுமதியான நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, நகர மையத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில்,இன்று (28) அனுராதபுர பன்முகப் போக்குவரத்து மையத்தின் (Multimodal Transport Hub) நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த ஒரு பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் இத்திட்டத்தின் முழுமையான பணிகளும் நிறைவடைந்து, முழுத் திட்டமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம், அனுராதபுரத்தை மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட, தூய்மையான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய முன்னேற்றமிக்க நகரமாக மாற்றும் மாபெரும் அபிவிருத்தித் திட்டத்தின் முக்கியமான ஒரு கட்டமாகும்.
