Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நுளம்புகளை அழிக்க பயன்படுத்தும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிப்பு!

ஆனி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகை விசிறல் செயல்முறையானது ஒரு வெற்றிகரமான நிரந்தர நடவடிக்கை அல்ல எனவும், இதன் மூலம் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அச்சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன,

டெங்கு பரவலுக்கு மத்தியில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளினால் புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், டெங்குவை ஒழிப்பதற்கான ஒரே தீர்வு அதுவல்ல. நுளம்பு ஒன்றின் வாழ்க்கை வட்டத்தில் முட்டை, குடம்பி, கூட்டுப்புழு மற்றும் முதிர்ந்த நுளம்பு என்று 4 நிலைகள் காணப்படுகின்ற போதிலும், இந்த புகைத்தல் செயல்முறை மூலம் முதிர்ந்த நுளம்புகள் மட்டுமே அழிக்கப்படுகிறது.

மேலும், ஒரு சுற்று புகையூட்டல் செய்வதற்கு மாத்திரம் அரசாங்கத்திற்கு 2,000 ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்படுகிறது. குறித்த புகையானது வான் பரப்பில் ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள் மாத்திரமே தங்கியிருக்கும் என்பதால், அந்த குறுகிய நேரத்திற்குள் புகைக்குள் சிக்கும் நுளம்புகள் மாத்திரமே அழிவடையும்.

அத்துடன், இச்செய்முறையால் டெங்கு நுளம்புகள் மாத்திரமின்றி, சூழலுக்கு நன்மை விளைவிக்கும் ஏனைய பயனுள்ள பூச்சியினங்களும் அழிவடைவதால் ஒட்டுமொத்த சுற்றுச் சூழல் சமநிலையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே, புகை விசிறல் செயல்முறையானது டெங்கு பரவலுக்கான நிரந்தரமான தீர்வு அல்ல என்பதை உணர்ந்து, மிகவும் அத்தியவசியமான காரணங்களுக்காக, அறிவியல் பூர்வமான வழிகாட்டுதல்களின்படி மட்டுமே புகையூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எனவே, நுளம்புகள் பறக்கும் நிலையை அடைந்த பிறகு புகையூட்டல் மூலம் சிறியதொரு தற்காலிக நிம்மதியைப் பெறுவதை விட, நுளம்பு முட்டைகள் மற்றும் நுளம்பு குடம்பிகளை ஆரம்பத்திலேயே அழிப்பதே நிரந்தர தீர்வாகும்.

பொதுமக்கள் தங்களது வீடுகளையும், சூழலையும் தூய்மையாக வைத்துக்கொண்டு, நீர் தேங்கும் இடங்களை முழுமையாக அகற்றுவதன் மூலம் மட்டுமே நுளம்பு உற்பத்தியைக் தடுத்து டெங்குவை ஒழிக்க முடியும் என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் 5 நவீன இயந்திரங்கள்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியலாக்கப்படுகிறது. என நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்துகொண்ட பெண்!

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube