Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பாகிஸ்தான் லாகூரில் பயிற்சி மையத்தின் கூரை இடிந்து 14 மாணவர்கள் பலி!

ஆடி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியிலுள்ள லாகூர் நகரின் காஹ்னா பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கல்வி மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஒரு ஆசிரியர் மற்றும் 8 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உயிரிழந்த மாணவர்கள் 4 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தின் தரமற்ற கட்டுமானம் காரணமாக, முழுமையாக நிறைவுபெறாத இரண்டாவது மாடியின் கூரை இடிந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பயிற்சி மைய உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, காயமடைந்தோருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை வெளிப்படையான விசாரணை மூலம் கண்டறிவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஹிட்லரின் வீடு காவல் நிலையமாக மீள திறப்பு

ஆடி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் பலி!

வைகாசி 25, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய மீனவர்கள் 30 பேர் விடுதலை!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube