Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

16 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இரத்து செய்யக் கோரி சரண குணவர்தன மேன்முறையீட்டு மனு தாக்கல்!

ஆடி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனக்கு விதிக்கப்பட்ட 16 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையையும் அபராதத்தையும் இரத்து செய்து, விடுதலை வழங்குமாறு முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன நான்கு மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி ரஞ்சன் டி சில்வா ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பும் நோக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்தபோது, கட்டாய கொள்முதல் நடைமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை குத்தகைக்கு எடுத்ததன் மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்கு தொடர்ந்திருந்தது.

விசாரணை முடிவில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, ஒவ்வொரு வழக்கிற்கும் நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது அந்த தீர்ப்பையும் அபராதத்தையும் ரத்து செய்ய கோரியே மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 589 ஆக அதிகரிப்பு

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் தனியார் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை

ஆடி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் பதிலடி தீவிரம்: பல அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் என அறிவிப்பு!

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube