Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பொலிவுடன் நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம்!

ஆடி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாடளாவிய ரீதியில் 100 புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், 40 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம் இன்று (06) மக்கள் பாவனைக்காகக் கையளிப்பு!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், “Clean Sri Lanka”  திட்டத்தின் நிலையான செயற்திட்டமாக “Dream Destination” (கனவு இலக்கு) வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்கீழ், முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம் இன்று (06) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

தனியார் நிறுவனமான ‘MAGA’ கட்டுமான நிறுவனத்தினால் 40 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில் இப்புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், புகையிரத பயணிகள் மேம்பாலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளமை, இரண்டாவது பயணிகள் மேடை (Platform) நீடிக்கப்பட்டுள்ளமை, சுகாதார மற்றும் கழிவுநீர்க் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளமை, உள் மற்றும் வெளிப் பகுதிகளில் வர்ணம் பூசப்பட்டுள்ளமை ஆகிய பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், பயணிகளுக்கான புதிய ஆசனங்கள் பொருத்தப்பட்டுள்ளமை, புகையிரத உத்தியோகத்தர் விடுதிகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளமை, மின்விளக்குக் கட்டமைப்பு நவீனமயமாக்கப்பட்டுள்ளமை மற்றும் புகையிரத நிலையப் பிரவேச வீதி Carpet இட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமை உள்ளிட்ட புகையிரத நிலைய மற்றும் அதனைச் சூழவுள்ள அனைத்துப் பௌதீகக் கட்டமைப்பு மறுசீரமைப்புகளும் இத்திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில் ஆரம்பம்!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோய் – பொதுமக்கள் அவதானம்

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தியத்தலாவையில் கோர விபத்து!

ஆனி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலக எண்ணெய் விலைகள் மீண்டும் சரிவு பாதையில்!

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube