Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: சுமந்திரன் வாதம்! விசாரணை செப்டம்பர் 7ஆம் திகதி

#Kalmunai #CourtCase #LegalUpdate #MASumanthiran #SriLanka #Politics #NewsUpdate #BreakingNews #CourtHearing #September7

ஆடி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு வழக்கு இன்று (08) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடைய மேலும் இரு மனுக்களும் அதே அமர்வில் நீதிமன்றத்தின் முன் எடுத்துக் கொள்ளப்பட்டன.

வழக்கு விசாரணையின் போது, தவராசா கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகி, கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக அம்சங்களை விளக்கி, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விரிவான சட்ட வாதங்களை முன்வைத்தார்.

அதேவேளை, இடையீட்டு எதிர்மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. கலீல் ரஹ்மான் ஆகியோரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் அடங்கிய சட்டத்தரணிகள் குழு ஆஜரானர்.

மேலும், சமூக செயற்பாட்டாளர்களான முபாரிஸ் எம். ஹனீபா மற்றும் ஏ.எம்.நசீர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள தொடர்புடைய வழக்குகளும் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இடையீட்டு மனுதாரர்களின் சட்ட வாதங்களும், ஏனைய தொடர்புடைய வழக்குகளின் மேலதிக விசாரணைகளும் பின்னர் தொடரப்படவுள்ள நிலையில், வழக்கை 2026 செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அன்றைய தினம் இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான சட்ட வாதங்களும், தொடர்புடைய வழக்குகளின் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாளை பலத்த மழை பெய்யக்கூடும்! வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

வைகாசி 22, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மண்டைத்தீவு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவு!

ஆனி 11, 2026
இந்தியாஇலங்கை

கொழும்பில் ஆரம்பமான இலக்கிய விழா!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெல்தெனியவில் உயிரிழந்த பெண்ணின் காதலன் தலைமறைவு !

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube