கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட Airbus 330 ரக பயணிகள் விமானம் பறவை மோதியதையடுத்து மீண்டும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
TK-731 என்ற பதிவிலக்கத்தைக் கொண்ட குறித்த விமானம், 246 பயணிகளுடன் பயணித்த நிலையில், நீர்கொழும்பு களப்பு கடற்பரப்புக்கு மேலாக பறந்துகொண்டிருந்த போது பாதுகாப்பு நடவடிக்கையாக எரிபொருள் வெளியேற்றப்பட்டு (Fuel Dumping) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை 10.15 மணியளவில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பில் அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
