கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கிலோகிராம் போதைபொருளடன் கைதுசெய்யப்பட்ட 22 தேரர்களில்டம் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் உண்மைகள் அறிக்கையிடப்பட்டுள்ளன. மஹா சங்கத்தினரின் ஆலோசனைகளைப் பெற்று ஒருபுறம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எவ்வித பாகுபாடுமின்றி தொடரும்.
தற்போது நாடு முழுவதும் தேசிய மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே, கட்டுநாயக்கவில் 110 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருளுடன் சில தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விசாரணைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
