Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ட்ரம்பை தொடர்ந்து சீனா செல்லும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்!

வைகாசி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சீன விஜயத்தை நிறைவு நாடு திரும்பியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அடுத்த வாரம் சீனாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே 19 மற்றும் 20ஆம் திகதிகளில் அமையவுள்ள புட்டினின் இந்த விஜயமானது, 2001ஆம் ஆண்டு சீனா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே கையெழுத்திடப்பட்ட ‘சீன-ரஷ்ய நட்பு உடன்படிக்கையின்’ 25ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல் மற்றும் உலகளாவிய வர்த்தகம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேசிவிட்டுச் சென்ற சில தினங்களிலேயே புடின் அங்கு செல்லவுள்ளமை சர்வதேச அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் “முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள்” குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆராயவுள்ளனர்.

உக்ரேன் போருக்குப் பின்னர் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள ரஷ்யா, சீனாவின் வர்த்தகத்திலேயே பெரிதும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான கைதிகள் மற்றும் உயிரிழந்த இராணுவத்தினரின் உடல்களை பரிமாறிககொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

உக்ரைன் தரப்பு இராணுவத்தினருடையதாகக் கருதப்படும் 528 உடல்களை ரஷ்யா சனிக்கிழமை உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளது. இந்த உடல்களை அடையாளம் காணும் பணிகளை உக்ரைன் தரப்பு ஆரம்பித்துள்ளது.

இதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை இரு நாடுகளுக்கும் இடையே 205 போர்க் கைதிகள் பரிமாற்றப்பட்டுள்ளனர் . இரு தரப்பிலிருந்தும் தலா 1,000 கைதிகளைப் பரிமாறிக்கொள்ளும் திட்டத்தின் முதற்கட்டமே இதுவென உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்

சீனாவின் முன்னாள் பணக்காரர் குவோ வென்குய்க்கு அமெரிக்காவில் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஆனி 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

ஹட்டன் பகுதியில் வாகன மோதலில் அரிய மலைச் சிறுத்தை குட்டி உயிரிழப்பு!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ. நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

வைகாசி 31, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

சித்திரை 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube