Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்!

வைகாசி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தனது மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீகஹவத்த – அங்கொட பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த அவர், குறித்த பெண்ணின் தலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது முகம் மற்றும் மார்புப் பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், இப்பெண்ணின் சட்டப்பூர்வ கணவரே இந்த தீ வைப்பை மேற்கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கமைய செயற்பட்ட பொலிஸார், முல்லேரியா பொலிஸ் பிரிவில் வைத்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் போத்தல் மற்றும் முச்சக்கரவண்டி என்பனவும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தான் தீ வைத்தது தனது சொந்த மனைவிக்கே என சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர்கள் இருவரும் தங்களது முந்தைய திருமணங்களிலிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பின்னரே திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்த பெண் பல்வேறு நபர்களுடன் பழகியதாகவும், பல நாட்களாகியும் வீட்டிற்குத் திரும்புவதில்லை என்றும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தீ வைத்த பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சந்தேகநபர் அப்பெண்ணிடம் கூறியிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சந்தேகநபர் இதற்கு முன்னர் எவ்வித குற்றச்செயல்களுக்கோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கோ உள்ளாகாத ஒருவர் எனவும், முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரிந்த ஒருவரே என பிரதேசவாசிகள் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடு!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடி நீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற இரத்தினபுரி சுற்றுலா விடுதிக்கு 5 இலட்சம் அபராதம்!

வைகாசி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொழில் முயற்சியாளர்கள் “இங்குபேசன்” நிலையத்தினை உபயோகிக்க வேண்டும் – சுனில் ஹந்துன்நெத்தி

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube