வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பாரவூர்தியில் பயணித்த 25 வயதுடைய இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
