Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

எபோலா தொற்றினால் இதுவரை 246 மரணங்கள் பதிவாகியுள்ளன!

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் தொற்று மிக அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், இது தீவிர நிலைமைகளை எட்டுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொங்கோவில் எபோலா பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில், குறுகிய காலத்தில் “இத்தனை அதிகமான பாதிப்புகள்” முன்னெப்போதும் பதிவானதில்லை என ஆளுகு நிறுவனத்தின் துணை இயக்குநர் ஆலன் கோன்சலஸ் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளை நேரில் மேற்பார்வையிடுவதற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரேயேசஸ், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கொங்கோவின் கிழக்கு இட்டூரி மாகாணத்திற்கு நேற்று (30) விஜயம் செய்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, கொங்கோவில் 1000க்கு மேற்பட்டோர் எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன, 246 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அண்டை நாடான உகாண்டாவிலும் 9 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.

கட்டுப்பாட்டுப் பணிகளில் உள்ள சவால்கள்”இந்தத் தொற்றின் உண்மையான வீரியம் மற்றும் பாதிப்பின் அளவை தற்போது யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாதுள்ளது.

எல்லைகள் மற்றும் வானூர்தி நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இட்டூரி மாகாணத்தின் தலைநகரான புனியாவுக்கு சென்ற உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், “எபோலாவால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தொடுவது போன்ற சில பாரம்பரிய இறுதிச்சடங்கு பழக்கவழக்கங்கள் வைரஸை மேலும் பரப்பக்கூடும் என்பதனால் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரண வங்கி மோசடி: உதவி முகாமையாளர் விளக்கமறியலில்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை இன்று!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும்!

ஆனி 1, 2026
உலகம்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube