Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச வங்கியொன்றில் 35 மில்லியன் ரூபா பணம் திருட்டு!

ஆனி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹொரணை மக்கள் வங்கியின் ATM இயந்திரத்திற்கு பணம் நிரப்புவதற்காக கொண்டுசெல்லப்பட்டு 35 மில்லியன் ரூபா பணம் இனம்தெரியாத நபரொருவரால்  திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை (3) பிற்பகல் ஹொரணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புதன்கிழமை (3) பிற்பகல் 2.55 மணியளவில், மக்கள் வங்கியின்  ஊழியர் ஒருவர் இரண்டு பணப்பைகளைத் தனது இரு கைகளிலும் கொண்டு சென்றுக் கொண்டிருந்த போது வங்கியின் பின்புறமாக இருந்த கதவின் ஊடாக வெளியே எடுத்துச் சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த நபரொருவர், ஊழியரிடமிருந்த இரண்டு பணப்பைகளையும் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

இவ்வாறு திருடப்பட்ட பணம், வங்கியின் ஏ.டி.எம் இயந்திரங்களில் வைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பணத்தை திருடி சென்ற சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், ஹொரணை பொலிஸார் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

இணைய மோசடி – பெண் கைது!

ஆனி 9, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

“டொக்சிக்”. திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம்!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நோர்வூட் வென்சர் தோட்டப்பகுதியில் தனியார் பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube