கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகமொன்றில் இன்று துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று காலை தொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில், இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி நகரைப் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் முதலில் தர்மபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன், பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
