Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தல்

ஆவணி 6, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் எனவும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் அரசியலமைப்பு விதிகளை “முழுமையாக அமுல்படுத்த” வேண்டும் எனவும், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் இலங்கை விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ‘டிட்வா’ (Ditwah) சூறாவளிப் பாதிப்பில் இருந்து இலங்கை மீள்வதற்கான இந்தியாவின் உதவிகள், எரிசக்தித் துறையிலான ஒத்துழைப்புகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அடையாளத் திட்டம், திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக உருவாக்குதல் மற்றும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கி புனரமைத்தல் உள்ளிட்ட இந்திய நிதியுதவியிலான திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவது குறித்தும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பிலும் இரு தரப்பும் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, இரு நாடுகளுக்கும் பரஸ்பர பலன்களை அளிக்கும் வகையில் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தே பேச்சுவார்த்தை அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

எனினும், மாகாண சபைத் தேர்தல் குறித்து எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெற்றதாக அதில் குறிப்பிடப்படவில்லை.

அத்துடன், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தியாவின் ஆதரவையும் “முழு ஒத்துழைப்பையும்” ஜனாதிபதி கோரியதுடன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுக்கூட்டமைப்பு, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து வலியுறுத்தியிருந்த பின்னணியில் இந்தியாவும் இந்த விடயத்தில் அழுத்தம் கொடுத்துள்ளது.

நாட்டின் ஒன்பது மாகாண சபைகளின் பதவிக்காலமும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் முடிவடைந்த போதிலும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தேர்தலை காலம் தாழ்த்தி வருகின்றன.

2024 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

இந்தியாவை மிரட்டிய இளம் சிங்கம்! மீண்டும் சதம் விளாசி அசத்தல்!

ஆவணி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமையளிக்கப்படவில்லை – மஹிந்த சமரசிங்க

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவு கஞ்சாவுடன் தம்பதியர் கைது!

ஆவணி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube