மழைப்பொழிவுடன் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக மொனராகலை மாவட்டத்தில் பத்து வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொனராகலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்களில் நேற்று (26) பிற்பகல் பலத்த காற்று வீசியதாகவும், அதன்போது ஹுலந்தாவ கிராம சேவகர் பிரிவில் 6 வீடுகளும் நக்கல வட்ட பிரதேசத்தில் 4 வீடுகளும் சேதமடைந்துள்ளது.
இதற்கு மேலாக, மொனராகலை சிறிவிஜயபுர பகுதியில் ஒரு சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் மின்கம்பி அமைப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மின்சார விநியோகத்தை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
