அமெரிக்காவுடன் எந்த சந்திப்பும் நடத்தப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை செயல்படுத்த அமெரிக்கா – ஈரான் அதிகாரிகள் சந்திப்பு நடத்தவிருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில் அதனை ஈரான் மறுத்துள்ளது.
சமீப நாள்களில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தம் கேள்விக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக வெளியான செய்திகளை ஈரான் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் காசிம் கரிபாபாடி மறுத்துள்ளார்.
“தொழில்நுட்ப ரீதியான எந்தச் சந்திப்பையும் இந்த வாரம் நடத்தப்போவதில்லை” என அவர் ஈரான் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
