Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

சீனாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கண்டனம்!

ஆடி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பசிபிக் பெருங்கடலில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சீனா நேற்று வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இதற்கு பல நாடுகளும் கவலை தெரிவித்து வருகின்றன.

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள கடற்பகுதியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. அங்கிருந்து தென் பசிபிக் கடற்பகுதியில் உள்ள இலக்கை ஏவுகணை அடைந்தது. சீனா இதுகுறித்த அதிகார்ப்ப்பூர்வ புகைப்படமோ ஏவுகணையின் மாதிரி வடிவங்களையோ இன்னும் வெளியிடவில்லை. ராணுவ வல்லுநர்கள் கூறுகையில், இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கக்கூடும். இந்த வகை ஏவுகணைகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை எனக் கருதப்படுகின்றன. மேலும் இவை JL-3 வகை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் என்றும் கணித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், ஆஸ்திரேலியா, மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன. குறுகிய முன்னறிவிப்புடன் இத்தகைய மூலோபாய ஏவுகணைச் சோதனைகளை நடத்துவது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அந்நாடுகள் எச்சரித்தன.

சீன கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையில் உண்மையான அணு ஆயுதம் அல்லாமல், போலி போர்க்குண்டு பயன்படுத்தப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
இது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதிதான் என்றும், எந்த நாட்டையும் குறிவைத்து இந்தச் சோதனை நடத்தப்படவில்லை என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது.
இந்தச் சோதனை சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறைக்கு இணங்க நடத்தப்பட்டது என்றும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது என்றும் சீனா தெரிவித்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையை குறைத்தது பாகிஸ்தான்!

ஆனி 21, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

உத்தரபிரதேசத்தில் தீ விபத்து – உயிரிழப்புகள் இல்லை!

சித்திரை 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சமரச பேச்சுக்கு முன்வந்த இஸ்லாமாபாத்!

ஆனி 1, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

புரட்டாதி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube