இலங்கையில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் சத்யா ஹேரத் எச்சரித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவிக்கையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் எனவும் குறிப்பிட்டார்.
பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் போதைப்பொருள் ஊசிகளைப் பகிர்ந்து பயன்படுத்துவது HIVபரவுவதற்கான முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. HIV தொற்றுக்கு முழுமையான குணமில்லை என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியான சிகிச்சையைப் பெறுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனையடுத்து, தேசிய எய்ட்ஸ்/பாலுறவு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இலவச HIV, பாலுறவு நோய் மற்றும் ஹெபடைடிஸ் பரிசோதனைக்கான நடமாடும் மருத்துவ முகாம்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
