இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை நேற்று (21) கொழும்பில் உள்ள பிரித்தானிய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் துணை உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனியும் கலந்துகொண்டார். மலையக சமூகத்தின் முன்னுரிமைகள், டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இதன்போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
சந்திப்பின் பின்னர், ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலுக்கு நன்றி தெரிவித்த ஜீவன் தொண்டமான், இலங்கை–ஐக்கிய இராச்சியம் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான உரையாடல்களை தொடர்ந்து முன்னெடுக்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.
