எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 தர புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, அது தொடர்பான அனைத்து விதமான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஆகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், மற்றும் மாதிரி வினாத்தாள்களை உள்ளடக்கிய கருத்தரங்குகளை நடத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சை வினாத்தாள்களைக் குறிப்பிட்டு சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரங்களை வெளியிடுவதற்கும் பரப்புரை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
