ஜப்பானின் நிஷின் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மகளிர் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணியின் சார்பாக ஆயிஷா ஜாபர் 71 ஓட்டங்களையும், ஷவால சுல்பிகர் 54 ஒட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 178 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பாக அணியின் தலைவர் சமரி அத்தபத்து 83 ஓட்டங்களையும், ஹசினி பெரேரா 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
