Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சஹ்ரான், பிரபாகரன் மீது சமூக தாக்குதல் இல்லை : ஞானசார தேரர் மீது என் இவ்வளவு வன்மம்?

ஐப்பசி 2, 2026
படிக்க 3 நிமிடங்கள்

 

சஹ்ரான் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை விடவும் ஞானசார தேரர் மீதே சமூக ஊடகங்களில் சேறுபூசும் நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெறுவதாக தித்தகலே தேரர் குற்றஞ்சாட்டினார்.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கக்கோரி அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட 50 இலட்சம் கையெழுத்து சேகரிப்பில் புதன்கிழமை (30) எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட காணொளி தொடர்பாக இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சஹ்ரான் தொடர்பில் இவ்வளவு ஊடகத் தாக்குதல் நடத்தப்படவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அவருக்கு எதிராகவும் இவ்வளவு சமூக ஊடகத் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை. ஆனால் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது ஏன் இவ்வளவு தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே நான் கையெழுத்துகளை சேகரித்து வருகின்றேன். நான் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறவில்லை. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பில் நடைமுறை தவறு ஏற்பட்டிருந்தால், அதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியலமைப்பின் ஊடாக சரிசெய்ய முடியுமா என்பதை பரிசீலிக்க வேண்டும்.

அநுர குமார திசாநாயக்க அவர்கள் திசைகாட்டியின் ஜனாதிபதி மாத்திரமல்ல. இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் ஜனாதிபதி. நான் அவருக்கு வாக்களித்தவன். வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் செயற்பட்டேன். எனவே அவரை விமர்சிப்பது எதிரியாக அல்ல. மக்கள் அரசாங்கத்தை உருவாக்கியிருந்தால், அந்த அரசாங்கத்திடம் கேள்வி கேட்கவும் தவறுகளை சுட்டிக்காட்டவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது உறுப்புரையில் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே ஆட்சியாளர்கள் தர்மத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்த வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் எதிரிக்கு மன்னிப்பு வழங்குவது எமது கொள்கையல்ல என நுகேகொடையில் கூறியதாக நான் அறிகிறேன். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. புத்தர் எதிரியை வெறுக்கவும் பழிவாங்கவும் போதிக்கவில்லை.

நீங்கள் மார்க்ஸிச வாதத்தைப் பேசலாம். மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகளை முன்னெடுக்கலாம். தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகளை முன்வைக்கலாம். திசைகாட்டியின் அரசியல் பயணத்தை தொடரலாம். ஆனால் இந்த நாட்டின் அரசியலமைப்பையும் புத்தரின் போதனைகளையும் மறந்துவிட முடியாது. ரில்வின் சில்வா அவர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் அரசியல் நபர் என்பதால், அவர் வழங்கும் ஆலோசனைகளும் தர்மத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

அனுராதபுரம் ருவன்வெலிசாய பகுதியில் இரண்டு அல்லது மூன்று பேர் என்னுடன் வாக்குவாதம் செய்தனர். ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டனர். மிஹிந்தலை கட்டுச்சேய பகுதியில் சிலர் எதிர்த்தனர். அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டனர். ஆனால் காணொளி திருத்தப்பட்டு எதிர்ப்பு தெரிவித்த காட்சிகள் மாத்திரம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் கிடைத்துள்ளன.

பெலவத்தையில் இருந்து செயற்படும் சேறு பூசும் குழுவினர் எனது காணொளியை பதிவிறக்கம் செய்து திருத்தி வெளியிட்டுள்ளனர். இதனால் மக்களின் கருத்து மறைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சட்டத்தரணிகளின் ஆலோசனையைப் பெற்று நீதிமன்றத்தை நாடவும் எதிர்பார்க்கிறேன்.

தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் சட்டரீதியாக கேள்வி கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியதை நினைவில் வைத்துள்ளேன். அதற்கான சட்டத்தை கொண்டு வரும் வரை அடுத்த மூன்று வருடங்களும் இந்தக் கேள்வியை எழுப்புவேன்.

ஞானசார தேரருக்கான பொதுமன்னிப்பு கோரிக்கையுடன் ஆரம்பித்த எனது போராட்டம் தற்போது அதர்மத்துக்கு எதிரான தர்மப் போராட்டமாக மாறியுள்ளது. யாரையும் வெறுக்காமல் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பேன். ஊடகங்கள் வெறுப்பை வளர்ப்பதை விட கருணை, உண்மை ஆகிய புத்த போதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஆட்சியாளர் தர்மமானவராக இருக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை, என்றார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆண்களும் இல்லத்தரசர்களாக இருக்கலாம் – சென்னை உயர் நீதிமன்றம்

புரட்டாதி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

கொழும்பு மரதன் 2026 – விசேட போக்குவரத்து திட்டம்

புரட்டாதி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செட்டிகுளம் – நேரியகுளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் பதுக்கி வைக்கபட்டிருந்த புடவைகள் மீட்பு!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போசாக்கு மாதம்: கொட்டகலையில் ஆரோக்கிய சிற்றுண்டி விழிப்புணர்வு நிகழ்வு

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube