Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

JILAF தொழில்துறை உறவுகள் மற்றும் தொழிலாளர் கொள்கை தொடர்பான இருநாள் கருத்தரங்கு கொழும்பில்!

ஐப்பசி 2, 2026
படிக்க 4 நிமிடங்கள்

 

பெருந்தோட்டத் துறையின் தொழிற்சங்கங்களை வலுப்படுத்துவதற்கும், பெண்கள் மற்றும் தொழிலாளர் சமூகங்களின் நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் JILAF இன் பங்களிப்பிற்கு ஜீவன் தொண்டமான் பாராட்டு.

ஜப்பான் சர்வதேச தொழிலாளர் மன்றம் (Japan International Labour Foundation – JILAF) ஏற்பாடு செய்த தொழில்துறை உறவுகள் மற்றும் தொழிலாளர் கொள்கை (Industrial Relations and Labour Policy) தொடர்பான விசேட இருநாள் கருத்தரங்கு கொழும்பில் நேற்று (ஒக்டோபர் 1) நடைபெற்றது.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்ற நிறுவனத்தில் (Sri Lanka Foundation Institute – SLFI) ஒக்டோபர் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் நடைபெறும் இந்த வருடாந்த கருத்தரங்கிற்கு JILAF நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் திருமதி சீ மற்றும் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் திரு. ரவி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்நிகழ்வில் சிறப்பு பங்கேற்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டதுடன், தேசிய தொழிலாளர் முன்னணியின் (NTUF) பிரதிநிதி ஒருவரும், இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் (SLNSS) பொதுச்செயலாளர் லெஸ்லி தேவந்திரா, இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் (EFC) பிரதி பணிப்பாளர் ஆதில் காசிம் மற்றும் தொழிலாளர் திணைக்களத்தின் ஆணையாளர் ரூபிகா ரணவக்க ஆகியோரும் பங்கேற்றனர்.

இதேவேளை, JILAF இன் பிரதி பொதுச் செயலாளர் திரு. ஹிட்டோஷி சுசுகி இணையவழி ஊடாக இக்கருத்தரங்கில் கலந்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் நடைபெற்று வரும் இவ்விசேட கருத்தரங்கில், தொழில்துறை உறவுகள் (Industrial Relations – IR), அடிமட்ட சமூக நடவடிக்கைகள் (Small Grassroots Activities – SGRA), விவசாயத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

கருத்தரங்கின் முதலாவது நாளில் உரையாற்றிய இ.தொ.கா. பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இலங்கையில், குறிப்பாக பெருந்தோட்டத் துறையில், தொழிற்சங்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் தொழில்துறை உறவுகள் தொடர்பான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து வரும் JILAF நிறுவனத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நிகழ்ச்சிகளின் மூலம் புதிய தொழில்நுட்பங்கள், நவீன தொழிற்சங்க நடைமுறைகள் மற்றும் ஜப்பானின் வெற்றிகரமான தொழில்துறை உறவுகள் தொடர்பான மதிப்புமிக்க அறிவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எமக்குக் கிடைக்கிறது.

எமது தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு ஆண்டுதோறும் ஜப்பானுக்குச் சென்று, அந்நாட்டின் வெற்றிகரமான தொழிற்சங்க நடைமுறைகளை நேரடியாகக் கற்றுக்கொண்டு, பயனுள்ள அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கி வரும் JILAF நிறுவனத்திற்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜப்பானில் பெற்றுக்கொள்ளப்படும் அறிவும் அனுபவமும் இலங்கையில், குறிப்பாக எமது தொழிற்சங்கப் பணிகளிலும் பெருந்தோட்டத் துறையிலும் பயன்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

மேலும், JILAF நிறுவனம் வழங்கி வரும் Small Grassroots Activities – SGRA திட்டங்களுக்காகவும் அவர் விசேட நன்றியைத் தெரிவித்தார்.
தையல் பயிற்சித் திட்டத்தின் மூலம் பல பயனாளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் தற்போது தங்களுக்கென சொந்தத் தொழில்களை ஆரம்பித்து, தையல் நிலையங்கள் மற்றும் சிறிய ஆடை உற்பத்தி நிலையங்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் பல குடும்பங்கள் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, கொட்டகலை சி.எல்.எப் இல் தையல் பிரிவை மீண்டும் செயல்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஏற்கனவே தையல் பயிற்சி பெற்றுள்ளதுடன், சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்கான ஆர்வமும் தொழில் திட்டங்களும் கொண்ட திறமையான பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், JILAF வழங்கும் நிதியுதவியுடன் காளான் வளர்ப்பு (Mushroom Cultivation) திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை ஒரு முன்மாதிரி விவசாயத் திட்டமாக உருவாக்கி, எதிர்காலத்தில் நிலையான முறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்வதே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, விவசாயத் திட்டங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பயிற்சிகளை வழங்கி வரும் JILAF நிறுவனத்திற்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்ப உதவியின் மூலம் மேம்படுத்தப்பட்ட விவசாய முறைகளை அறிமுகப்படுத்துவதுடன், பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில், குறிப்பாக பெருந்தோட்டத் துறையில், தொழிற்சங்கங்களை வலுப்படுத்துவதற்கும், பெண்களை வலுவூட்டுவதற்கும், நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்குவதற்கும் தொடர்ந்து ஆதரவும் அர்ப்பணிப்பும் வழங்கி வரும் JILAF நிறுவனத்திற்கு ஜீவன் தொண்டமான் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். JILAF இன் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் ஆதரவும் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பெருந்தோட்ட சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கியமான பங்களிப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்திலும் இந்தப் பயனுள்ள ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என நம்புவதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த விசேட இருநாள் கருத்தரங்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரிவு, தொழிற்சங்கப் பிரிவு, இளைஞரணி மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மீட்பு, மறுசீரமைப்பு மற்றும் திவால்தன்மைச் சட்டமூலம் சட்டமாகியது

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறை அதிகாரிக்கு கொலை மிரட்டல்!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் மீன்களை உலரவைக்கும் கூடங்களை அமைப்பதற்கான திட்டம்!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சி புகையிரத கடவையில் விபத்து – 22 வயது பெண்ணொருவர் பலி

ஆவணி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube