Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும நிதி மோசடியை ஒப்புக்கொண்ட நோர்வுட் பிரதேச செயலக அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

#அஸ்வெசும #Aswesuma #நிதிமோசடி #இலங்கைசெய்திகள் #SriLankaNews #BreakingNews #அரசியல்செய்திகள் #FinancialFraud #SriLankaPolitics

அக்டோபர் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட அந்த அலுவலகத்தின் 14 ஊழியர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 

அவ்அலுவலகத்தின் அஸ்வெசும பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இரண்டு அதிகாரிகள் இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

அந்த இரு அதிகாரிகளினாலும் பணம் வைப்பு செய்யப்பட்டிருந்த மாவட்ட செயலகத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஒருவர் மற்றும் ஹட்டன் வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களின் பணி, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

நோர்வுட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கணக்காய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சந்தர்ப்பத்தில், அலுவலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள் உட்பட மேலும் பல பிரிவுகளைச் சேர்ந்த 14 ஊழியர்கள் 2023 ஆம் ஆண்டு முதல் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டுள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரால் அது குறித்து நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட பின்னர், மாவட்ட செயலாளரால் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு அறியத்தரப்பட்டுள்ளது.

 

நோர்வுட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள அஸ்வெசும நிதி மோசடி சுமார் 6 கோடி ரூபாயை நெருங்குவதால், இதன் மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

போர் நிறுத்த அறிவிப்புக்கு மத்தியிலும் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல்

அக்டோபர் 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் 3 கடைகளை உடைத்து பல இலட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்கள் திருட்டு!

மே 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!

ஜூலை 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுழைவாயிலினூடாக துப்பாக்கி பிரயோகம் நடத்தியது தவறில்லை – பிரசாத் ஹேமந்த குமார

ஜூலை 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube