பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞானசார தேரர் இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளதுடன், அவருக்கு எதிராக மேலும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பொதுமன்னிப்பு வழங்குவது பொருத்தமற்றது என அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இன மற்றும் மத பதற்றங்களைத் தூண்டும் நடவடிக்கைகள் பொறுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் அரசாங்கத் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
