சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி, மு.ப. 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மு.ப. 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
