யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் உள்ள காணியொன்றில் அமைந்துள்ள கிணற்றைச் சுத்தம் செய்து நீரை இறைத்தபோது, கிணற்றுக்குள் காணப்பட்ட சாக்குமூட்டைகளிலிருந்து பெருமளவிலான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று (20) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து, இன்று (21) நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் உதவியுடன் குறித்த துப்பாக்கி ரவைகளை முழுமையாக மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த ரவைகள் எவ்வாறு அங்கு கொண்டுவரப்பட்டன என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
