கம்பஹா மாவட்டத்தின் நிட்டம்புவ நகரில் அமைந்துள்ள கடையொன்றில் இன்று (23) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இரவு சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் எவருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
