Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

500 நாட்கள் சிறையில் இருக்கவும் தயார் – நாமல் ராஜபக்ச!

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தாம் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் (24) 50 நாட்கள் நிறைவடைவதாகத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை ஏற்பட்டு, வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமானால் 500 நாட்கள்கூட சிறையில் இருக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், நேற்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அனுப்பிய விசேட கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையின் சுவர்களுக்குள் தாம் அடைக்கப்பட்டிருந்தாலும், சிறைக்கு வெளியே தனக்குப் பெருமளவிலான மக்கள் ஆதரவு இருப்பதை அறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மைச் சிறையில் அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சில தரப்பினர் எதிர்கொள்ளும் அழுத்தங்களைப் புரிந்துகொள்வதற்கான உதாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனாக இருப்பதும் தாம் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியான தாக்குதல்கள், நாட்டின் மத மற்றும் கலாசார அடையாளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், தற்போதைய பொருளாதார நிலைமை ஆகியவை குறித்தும் தனது கடிதத்தில் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலீடுகள் இழக்கப்பட்டு மக்கள் பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டின் பிரச்சினைகளுக்கான பொறுப்பை ஒரு குடும்பத்தின் மீது சுமத்த முயற்சிப்பது நகைப்புக்குரியது என்றும், இது தற்போதைய ஆட்சியாளர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

எதிர்காலத்தில் நீதிமன்றத்தால் தாம் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிநபர்களைச் சிறையில் அடைக்க முடியும்; ஆனால் மக்களின் அபிலாஷைகளைச் சிறையில் அடைக்க முடியாது என்றும் நாமல் ராஜபக்ச தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று இரவு விண்கல் மழை

மே 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி ஆற்றில் கோழிக்கழிவுகளைக் கொட்டிய இருவர் கைது!

மே 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இனி வீட்டில் இருந்தவாறே உங்கள் தூரப்பயணத்திற்கான ஆசனங்களை முன்பதிவு செய்யலாம்!

மே 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு!

ஜூலை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube