இணையத்தைப் பயன்படுத்தும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் தேசிய அளவிலான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் ஆரம்பகட்டக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது.
சிறுவர்கள் இணையவழியில் எதிர்கொள்ளக்கூடிய அச்சுறுத்தல்கள், பொருத்தமற்ற உள்ளடக்கங்கள் மற்றும் இணையத் துன்புறுத்தல்கள் போன்ற பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்தத் திட்டத்தின் ஊடாக கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயற்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
