Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

ஜோர்டானில் இலங்கைத் தூதரகத்திற்கு அருகில் தாக்குதல்!

நவம்பர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அருகில் இடம்பெற்ற தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நவம்பர் 5ஆம் திகதி நண்பகல் சுமார் 12.20 மணியளவில் தூதரகத்திற்கு அருகில் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஜவாத் அலி கலஃப் அல்-சலாய்டா (Jawad Ali Khalaf Al-Salaita) என்ற அதிகாரி உயிரிழந்துள்ளதாக ஜோர்டான் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் தாக்குதலாளியைக் கைது செய்துள்ளனர். அவரைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின்போது மற்றொரு பாதுகாப்பு அதிகாரியும் காயமடைந்துள்ளார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பாதுகாப்புப் படையினரை இலக்குவைத்து தாக்குதலாளி திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை பயங்கரவாதச் செயலாக ஜோர்டான் அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், ஜோர்டானிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், தூதரகப் பணியாளர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டித்வா’ புயலினால் வீடுகளை இழந்த 69 குடும்பங்களுக்கு நஷ்டஈடு!

மே 31, 2026
இந்தியாஉலகம்

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவு!

ஏப்ரல் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறை திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

செப்டம்பர் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலல்ல கடற்கரையில் பல பொதிகள் மீட்பு – போதைப்பொருள் என சந்தேகம்

அக்டோபர் 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube