Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் விசாரணைகளுக்கு மறுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தமது அதிகாரிகள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) கவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை 7ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம், தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி சென்று பார்வையிடும் ஆணைக்குழுவின் சட்டபூர்வ அதிகாரத்தை மீறும் நடவடிக்கையாக இருக்கலாம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுத் தலைவர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய தலைமையில் ஜூலை 14ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.

சிறைச்சாலையில் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாகவே அதிகாரிகளை உள்ளே அனுமதிக்க முடியவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், அதற்கான காரணங்களை முன்கூட்டியே ஆணைக்குழுவுக்கு அறிவிக்காதமை தொடர்பில் ஆணைக்குழு திருப்தியடையவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து மாற்றப்பட்ட கைதிகள் எதிர்கொள்ளும் நிலைமை குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

கைதிகள் மீது பழிவாங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல், சித்திரவதைகள், மருத்துவ வசதிகள் மறுக்கப்படுதல், குடும்பத்தினருக்கு கைதிகளின் இருப்பிடம் தொடர்பான தகவல்கள் வழங்குவதில் தாமதம் மற்றும் தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னரும் சிலர் தடுத்து வைக்கப்படுவது தொடர்பிலும் ஆணைக்குழு கவலை தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சிறைச்சாலைகள் உள்ளிட்ட தடுப்பு நிலையங்களுக்கு சட்டப்படி நுழையும் தமது அதிகாரத்தை மதித்து செயற்பட வேண்டும், மாற்றப்பட்ட கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் தண்டனை காலம் நிறைவடைந்த கைதிகளை உரிய முறையில் விடுதலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ 3 நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகிறார்!

வைகாசி 2, 2026
இலங்கை

தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்படவில்லை – ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க 

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி – தங்கெதர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயில்வே திணைக்களத்தின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்!

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube