Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு கோட்டையில் தடம்புரண்ட ரயில்

#ColomboFort #TrainDerailment #SriLanka #SriLankaRailways #RailwayNews #BreakingNews #Colombo #TrainAccident #RailSafety #NewsUpdate

ஆடி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் சற்றுமுன்னர் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையால், ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 04.45 க்கு ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த 1164 இலக்க ரயில், தாமதமாகி மேடையை வந்தடைய முற்பட்ட போது மாலை 04.35 அளவில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக ரயிலின் ஒரு பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த 7 ஆம் திகதியும் இதே ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தடம்புரள்வு காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகள் முழுமையாகத் தடைப்பட்டுள்ளதுடன், ரயிலை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்காக ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலைமையினால் மாலை வேளையில் பயணிக்கும் ஏனைய சில அலுவலக ரயில்களும் சற்று தாமதமடையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி விபத்து!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் முன்னிலை

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நுளம்புகள் பெருகுவது பாடசாலை வளாகங்களில்தான் அதிகம்

ஆனி 16, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரண பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube