Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

மன்னாரில் 14,000க்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 12 பேர் கைது!

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மன்னார் சவுத் பார் கடற்கரை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 14,072 கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், 3 டிங்கி படகுகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டுவரப்பட்டு, அனுமதியின்றி நிலப்பரப்பு வழியாக கொண்டு செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், கடல் அட்டைகள், படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து – ஒருவர் பலி!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டே வீதி ரயில் கடவை நாளை முதல் தற்காலிகமாக மூடல்!

ஆனி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொங்கோ, உகண்டாவில் தீவிரமடையும் எபோலா பரவல்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதியை பாராட்டிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube