மாத்தளை மாவட்டம் யட்டவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாலவெல பகுதியில், 100 கிராம் 500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் கண்டி உப பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (30) நண்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டு யட்டவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் துள்ளேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யட்டவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
