மஹர சிறைச்சாலை வளாகத்தில் இன்று (1) பிற்பகல் திடீரென ஏற்பட்ட பதற்றம் காரணமாகக் காயமடைந்த சிறைக் கைதிகளில் 7 பேர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அத்துடன், பதற்றமான சூழ்நிலை காரணமாக, சிறைச்சாலையிலுள்ள கட்டடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலைக்குள் நிலவும் அசாதாரண மற்றும் பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் (STF) பல குழுக்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, மஹர சிறைச்சாலை வளாகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
