நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தின் கிளைக்கு பொருட்கள் ஏற்றி வந்த லொரியின் பின் பகுதியில் சிக்குண்டு, அதன் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் சுமார் 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
