Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

உயிர் போனாலும் கவலையில்லை! – ஸ்பெயினின் சியூட்டாவுக்குள் நுழைந்த மொரோக்கோ இளைஞர்கள்

ஆவணி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டாவிற்குள் (Ceuta) மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான குடியேறிகள் சட்டவிரோதமாக நுழைந்ததைத் தொடர்ந்து, அப் பகுதியில் பெரும் பதற்றமும் மனிதாபிமான நெருக்கடியும் உருவாகியுள்ளது.

சூழ்நிலையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு தனது ஆயுதப் படைகளைக் களமிறக்கியுள்ளது.

சியூட்டா எல்லைப் பகுதியில் கடலைக் கடக்க முயன்ற போது, நீரில் மூழ்கி குறைந்தது 67 பேர் உயிரிழந்திருப்பதாக ஸ்பெயின் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இத்தகைய ஊடுருவல்களைத் தடுப்பதற்காக, எல்லைப் பகுதியில் கடலுக்குள்ளேயே பிரத்யேக தடுப்பு வேலிகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு தற்போது அறிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு நுழைந்தவர்களில் 48,000 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தகவல். தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, மொராக்கோவிலிருந்து ஏறத்தாழ 60,000 பேர் சியூட்டாவிற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் சுமார் 48,000 பேர் ஒரே நாளில் மீண்டும் மொராக்கோவிற்கே கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

எல்லைப் பகுதியில் குடியேறிகளின் வருகையைக் கட்டுப்படுத்தவும், அவர்களைத் திரும்பச் செல்ல வைப்பதற்காகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நகரில் உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடியேறிகளுக்கு உணவுப் பொருட்கள் சென்று சேர்வதைத் தடுக்கும் நோக்கில், அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

“கடைகளை மூடினாலும் சரி, எங்களுக்கு உணவு கிடைக்காவிட்டாலும் சரி… எங்கள் உயிர் போனாலும் கவலையில்லை! நாங்கள் இங்கேயே தங்குவதற்காகத்தான் வந்திருக்கிறோம்,” என மொராக்கோவிலிருந்து தஞ்சம் புகுந்த குடியேறி ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தற்போது எல்லைப் பகுதியில் இராணுவப் படையினரின் தீவிர கண்காணிப்பு தொடர்வதால், சியூட்டா எல்லைப் பகுதி தொடர்ந்து உச்சக்கட்ட பதற்றத்திலேயே நீடிக்கிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்பிட்டியில் அதிர்சி : 2 ½ வயது மகளை கிணற்றில் வீசிய தாய் கைது!

ஆனி 3, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

Breaking எரிபொருள் விலை குறைப்பு

ஆனி 29, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் சந்திப்பு – 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து!

வைகாசி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலகக் கிண்ண இறுதிப் போட்டியை காண பள்ளிகளுக்கு விடுமுறை!

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube