Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர் உரிமைகள் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆவணி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய சிறுவர் உரிமைகள் சட்டம் (Child Rights Act) தயாரிக்கும் பணியை விரைவுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும், தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின் பாதுகாப்புகளுடன் இணைத்து உறுதிப்படுத்தும் வகையில் இந்த புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது.

முன்னதாக 2024 பெப்ரவரி மாதத்தில் “Rights of Child Compact Act” என்ற பெயரில் சட்டமூலம் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை “Child Rights Act” (சிறுவர் உரிமைகள் சட்டம்) என பெயர் மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய மேலதிக விடயங்களை உள்ளடக்கிய வகையில் திருத்தப்பட்ட கருத்துரு (Concept Paper) தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் அடிப்படையில் சட்ட வரைவுத் திணைக்களம் ஏற்கனவே சட்டமூலத்தை தயாரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கருத்துருவின் அடிப்படையில் சட்டமூலத்தை விரைவாக இறுதிப்படுத்த சட்ட வரைவுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கும் யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த யோசனையை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை மாதத்தின் முதல் 5 நாட்களில் 5,673 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு முதல் OCI அட்டை வழங்கப்பட்டது

ஆடி 8, 2026
இலங்கைஎங்கள் ஊர்

புசல்லாவையில் கோலாகலமாக தொடங்கிய ‘மெல்போட் பிரீமியர் லீக் – சீசன் 03’!

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு – டேம் வீதி கட்டிடம் ஒன்றில் பாரிய தீவிபத்து!

வைகாசி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube